பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’… ரிலீஸானது அசத்தலான புதிய போஸ்டர்!
March 11, 2021 / 11:19 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்து வருகிறார்கள். சமீபத்தில், பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இன்று (மார்ச் 11-ஆம் தேதி) மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை இந்த ஆண்டு (2021) ஜூலை 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Some call it madness, we call it love. This love story will forever be etched in your hearts! 💕
Team #RadheShyam wishes you all a very Happy #MahaShivratri! ✨#30JulWithRS
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.