முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
சமீபத்தில், பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, தயாரிப்பு நிறுவனமே டீசர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.
Get ready for the biggest love announcement of the decade!
♥️
14th Feb, save the date!#RadheShyamPreTeaser
https://t.co/ALrESp2z7v
Starring #Prabhas & @hegdepooja
Directed by @director_radhaa
Presented by @UVKrishnamRaju garu pic.twitter.com/TGyV5JVXLD— UV Creations (@UV_Creations) February 6, 2021