அடேங்கப்பா… தெலுங்கில் 11 நாட்களில் ‘லவ் டுடே’ செய்த வசூல் இத்தனை கோடியா?
December 6, 2022 / 02:38 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ் டுடே’ கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்தனர். தற்போது, கடந்த 11 நாட்களில் இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.13.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.