• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ள வெங்கட்பிரபுவின் சக்சஸ் வீடியோ!

பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ள வெங்கட்பிரபுவின் சக்சஸ் வீடியோ!

  • August 8, 2020 / 03:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ள வெங்கட்பிரபுவின் சக்சஸ் வீடியோ!

நடிகராக தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த வெங்கட்பிரபு, 14 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 7ம் தேதி இயக்குனராக தன் முதல் நாள் “சென்னை 600028” படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக அவரது தம்பி மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, இயக்குனராக வெங்கட்பிரபுவின் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 600028” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனரான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் சென்னை 600028 பகுதி 2 ஆகிய படங்களை இயக்கினார்.

கலகலப்பான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் என இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

“சென்னை 600028” படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நித்தின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், விஜயலட்சுமி, அஜய் ராஜ், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக் அருண் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு பின்னணி இசையையும் பாடல்களையும் இசையமைத்திருந்தார்கள். கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 14 வருடங்களுக்கு முன் இன்று தொடங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பிரேம்ஜி வெளியிட்ட இந்த பதிவுக்கு வெங்கட்பிரபுவும் நன்றி கூறி ரிப்ளை செய்துள்ளார். இவர் வெளியிட்ட இந்த வீடியோவில் சென்னை 600028 படத்தில் தொடங்கி கடைசியாக இயக்கிய படம் வரை இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளதாவது “இதை எடிட் செய்த ராம்ஜிக்கு எனது மனமார்ந்த நன்றி. 14 வருடங்களுக்கு முன் என் திரையுலக பயணத்தை இயக்குனராக இன்று தொடங்கினேன். கடவுளுக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மிகப்பெரிய நன்றி” என்று உணர்ச்சிவசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Premgiamaren/status/1291610337125359618?s=19

தற்போது வெங்கட் பிரபு சிம்பு நடிப்பில் “மாநாடு” எனும் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thank q https://t.co/LUNRepJTov #ramji for this awesome edit!!! Yup our journey started exactly 14yrs ago today!! God is kind!! Thanks everyone for ur love and support!!! https://t.co/O47FTdJ2xA

— venkat prabhu (@vp_offl) August 7, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director
  • #Premgi amaren
  • #Venkat Prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

Thalapathy 68 :  ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version