கொரோனா லாக்டவுன் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரிலீசுக்கு காத்திருந்த படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளியானது.
இதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாக டிஜிட்டல் திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்கள். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை டிஜிட்டல் தளத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
தமிழில் ரம்யாகிருஷ்ணன், பிரசன்னா, அக்ஷரா ஹாசன், இந்துஜா, பூர்ணா உள்ளிட்டோர் ஏற்கனவே டிஜிட்டல் திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது நடிகை பிரியா ஆனந்த் தனது முதல் டிஜிட்டல் வெப்சீரிஸில் நடிக்க போவதாக செய்தி வெளியிட்டுள்ளார். எனினும் இவர் இந்தி மொழியில் நடிக்கவுள்ளார்.
இந்தியில் உருவாகி வரும் “சிம்பிள் மர்டர்” என்ற சோனி நிறுவனத்தின் வெப் சீரிஸில் நடிகர் பிரியா ஆனந்த் தனது முதல் டிஜிட்டல் படைப்பை தரவுள்ளார். சச்சின் பதக் இயக்கத்தில் இந்த வெப் சீரிஸில் மோகமத் ஷீசன் அயுப், மீரா சோப்ரா, அமித் சியால் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.
தற்போது இந்த செய்தியை பிரியா ஆனந்த் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I've had the good fortune of getting back to work for over 21 days!
Soo grateful to have the opportunity to make my digital debut in Hindi #Simplemurder