நடிகை ப்ரியா பவானிசங்கர் பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இவர் 2017 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாதமான்” திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில் நடித்தார்.
பின்பு நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் “மான்ஸ்டர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு கார்த்திக் நரேன் இயக்கத்தில் “மாபியா” என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி தற்போது குருதி ஆட்டம், ஓ மனப் பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. மேலும் கசடதபற, வான், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவைமட்டுமின்றி டைம் என்ன பாஸ் எனும் ஓடிடி வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். தற்போது இவர் கார் ட்ரிப் சென்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Road trip😎 Making memories with that gloomy weather and vintage playlist🤩
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on
View this post on Instagram
wearing @ashwin.thiyagarajan ❤️ HMU @viji_sharath 🤗 PC @deran_photography 😊
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on