தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ரசிகர்கள் மனதில் முன்னணியில் இருக்கும் நாயகி த்ரிஷா . பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் நடித்த த்ரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் தற்போது த்ரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ராங்கி .
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தை எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி உள்ளார் .சி.சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார் . படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது .
த்ரிஷாவின் ராங்கி அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . வெளியான முதல் 10 நாளில் ராங்கி படம் 1.35 கோடி வசூல் செய்துள்ளது.