பாரதிராஜாவால் நான் எட்டிய உயரம் இது!- ராதிகா சரத்குமார்
August 13, 2020 / 07:40 PM IST
|Follow Us
1978 ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா சரத்குமார். தற்போது இவர் திரையுலகில் 42 வருடங்களை நிறைவு செய்ததையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இவரது குரு பாரதிராஜா தற்போது ராதிகாவை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை..
இந்த பதிவில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது “என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கிற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன். 42 வருடம் ஆகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை. பால்வெளி திரளுக்கு எல்லையில்லை” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த பதிவை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ராதிகா சரத்குமார் “நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நீங்கள் மட்டும்தான் காரணம். உங்களுடைய ஆசீர்வாதத்தால் மட்டுமே நான் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ளேன். ஆண்கள் ஆதிக்கம் உள்ள இந்தத் துறையில் உங்கள் வார்த்தை என்றுமே என்னை உயரத்தில் வைத்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “வானம் கொட்டடும்” படத்தில் நடித்திருந்த ராதிகா சரத்குமார், தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘துருவநட்சத்திரம்”, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் “ஜெயில்” படத்திலும், அதர்வா முரளி நடிப்பில் வெளியாகவிருக்கும் “குருதி ஆட்டம்” படத்திலும் நடித்து வருகிறார்.