‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன்.
அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் ராஜு படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
View this post on InstagramA post shared by Raiza Wilson (@raizawilson) on