பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .
இந்நிலையில் இந்த படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த படம் ஓடிடியில் மே 20-ஆம் தேதி வெளியானது தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்து இருந்தது . ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இப்படி பல சாதனை செய்த ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது சாதனைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது . அதாவது ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கார் விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக சிறந்த இயக்குனர் , சிறந்த திரைக்கதை ஆசிரியர் ,சிறந்த நடிகர் , துணை நடிகர் உள்ளிட்ட 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது .
இந்நிலையில் அகாடமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் “நாட்டு நாட்டு ” என்கிற பெருமையை ஆர் .ஆர் .ஆர் படத்தின் பெருமையை அடைந்துள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.