சாத்தான்குளம் பிரச்சனையை பற்றி ரஜினியின் ஆவேசமான அறிக்கை!
July 1, 2020 / 02:31 PM IST
|Follow Us
சமீபத்தில் சாத்தான்குளத்தில் ஃபனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவர் போலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டு லாக்கப் மரணம் அடைந்தார்கள். இது நாடு முழுவதும் மக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் பலரும் இவர்களது மரணம் குறித்து நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதிகள் ஆலோசித்து இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காவலர்களை பணி மாற்றம் மற்றும் கவுன்சிலிங் தரக்கோரி தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
இரு அப்பாவிகளை அநியாயமாய் கொன்ற போலீசாருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று இணையதளம் மற்றும் இதர இடங்களில் போராட்டங்கள் வெடிக்கிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து பல சினிமா பிரபலங்களும் இந்த லாக்கப் மரணம் குறித்து ஆவேசமாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரின் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் ட்விட்டரில்” தந்தையும் மகனும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனிதன இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரே சில போலீசார் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது.# சத்தியமா.. விடவே கூடாது!” என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பிரபலங்களும் சாத்தான்குளத்தில் நடந்த அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்.