தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.
கடந்த வாரம் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல. வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நாளை (டிசம்பர் 12-ஆம் தேதி) நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பிறந்த நாள் என்பதால் அவரின் பர்த்டே ஸ்பெஷல் common dp-யை சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், கல்யாணி ப்ரியதர்ஷன், ஆத்மிகா, மிருணாளினி ரவி, கலைப்புலி.எஸ்.தாணு, சுனில் ஷெட்டி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், லிங்குசாமி, ராகவா லாரன்ஸ், கீர்த்தி சுரேஷ், பிரணிதா, சாக்ஷி அகர்வால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வேதிகா, அபர்ணா பாலமுரளி, அதிதி ராவ் ஹைதரி, ராஷ்மிகா மந்தனா, தேசிங்கு பெரியசாமி, பா.இரஞ்சித், ஐஸ்வர்யா மேனன், திலீப், கே.எஸ்.ரவிக்குமார் என 70-க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.
THE OFFICIAL BDAY CDP
WE LOVE YOU THALAIVAAAAA!!
A @yuvrajganesan Design
#HBDSuperstarRajinikanth @Rajinikanth #Annaatthe #Thalaivar pic.twitter.com/wPHcNyn8Ua
— Rajini
Followers (@RajiniFollowers) December 11, 2020