தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி படமும், இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படமும் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். தற்போது, ஏ.ஆர்.ரஹ்மானை ரஜினியும், அவரது மகள் ஐஸ்வர்யாவும் நேரில் சந்தித்து ‘லால் சலாம்’ படம் குறித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus