போலீஸாரை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்… எதற்காக தெரியுமா?
July 29, 2022 / 09:42 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகனும், மிக முக்கிய ரோலில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமாரும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தற்போது, தன்னை இந்த நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.