ரஜினியை நேரில் சந்தித்து பேசிய ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்த வண்ணமுள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் இப்படம் உலக அளவில் ரூ.7.50 கோடி வசூல் செய்துள்ளதாம்.

கடந்த ஆண்டு (2021) ‘தி லெஜண்ட்’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்தபோது, டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் அவரின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக அங்கு சென்றிருந்தார். அப்போது லெஜண்ட் சரவணனும், ரஜினிகாந்தும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.