ராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்கு அளிப்பதில் சிக்கலா?
May 4, 2020 / 06:30 PM IST
|Follow Us
கொரோனா தொற்றில் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள 750க்கும் மேல் உள்ள மண்டபங்களை பயன்படுத்தும் நோக்கில் சென்னையின் மாநகராட்சி ஆணையர் அனைத்து மண்டபங்களும் அறிக்கை அனுப்பியுள்ளார்.இந்நிலையில் ஆணையர் கூறிய மறுநாளே ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 நாட்களாக உச்சநிலையை அடைந்து வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேலானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. அதிலும் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே இதுவரை 1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டதால், பள்ளி, கல்லூரி மற்றும் கல்யாண மண்டபங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி, தேசிய அவசர மருத்துவ பேரிடரை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள சுமார் 750 திருமண மண்டபங்களையும் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பராமரிப்பு பணி காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முதலில் ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்துவிட்டு தற்போது அதில் இருந்து பின் வாங்கி இருக்கிறார் ரஜினி என்ற தகவல்கள் பரவலாக சமூக வலயத்தளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக, தி.மு.க.வின் கலைஞர் அரங்கம், தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க அலுவலகங்கள் என அனைத்தையும் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான மையமாக பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு அனுமதியளித்திருந்தார் தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை கொரோனா தடுப்பு பணிக்கு உபயோகித்துக்கொள்ள அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.