1992 ஆம் ஆண்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அண்ணாமலை”. இந்தப் படம் வெளியான நாள்முதலே வசூல் வேட்டையில் இறங்கியது.இன்றும்கூட இந்த படத்தின் டயலாக்களும் பாடல்களும் மக்களால் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இசையமைப்பாளர் “தேவா” வின் இசையில் முழுமையடைந்தது.
இப்படத்தில் இடம்பெறும் “வந்தேண்டா பால்காரன்” சூப்பர் ஹிட் என்று சொன்னால் மிகையாகாது.
புகழ்பெற்ற
“சூப்பர் ஸ்டார் ரஜினி” என்ற டைட்டில் கார்ட் மற்றும் அதற்கென்று ப்ரத்தியேகமாக செதுக்கிய பின்னணி இசை இப்படத்திலேயே முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிகை குஷ்பு அசத்தியிருப்பார். இப்படத்தில் நடிகர்
சரத் பாபு ஓர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.தமிழில் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.
ரஜினிகாந்த் பால்காரன் வேடத்தில் நடித்து, சிறப்பான கருத்துக்கள் நிறைந்த டயலாக்குகளை இத்திரைப்படத்தில் பேசியிருக்கிறார். இவருக்கும் நடிகர் சரத்பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் நட்பு, அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களையும், சக்திவாய்ந்த வில்லன்களின் சதியையும் சுற்றி இந்த படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது.
சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை 28 ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களால் முதல் நாள் போலவே ரசிக்கப்பட்டு வருகிறது சிறப்பம்சம்.