தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம்.
இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சமீபத்தில், இப்படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘மொய்தீன் பாய்’ என்று அறிவித்ததுடன், அவரின் கேரக்டர் போஸ்டரையும் ரிலீஸ் செய்தனர்.
இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2024) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசரை வருகிற நவம்பர் 12-ஆம் தேதி காலை 10:45 மணிக்கு தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
Adding a spark
to your Diwali celebration with an exciting announcement!
Get ready for a 1min 34secs preface of #LalSalaam releasing this Sunday, Nov 12 at 10:45AM
In Cinemas ️ PONGAL 2024 Worldwide
Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!… pic.twitter.com/0Y0dfi0bHG
— Lyca Productions (@LycaProductions) November 10, 2023