பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான கமலின் ‘விக்ரம்’… ரஜினியின் தீவிர ரசிகர் தான் வில்லனாமே!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. அதற்கான வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் பாப்புலர் ஹீரோவும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுவும் நம்ம ராகவா லாரன்ஸுக்கு இப்படத்தில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம். ராகவா லாரன்ஸ் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

Share.