“என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”… ரஜினி வெளியிட்ட அறிக்கை!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 12-ஆம் தேதி) நடிகர் ரஜினியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது, ரஜினி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரு. கமல் ஹாசன், திரு. இளையராஜா, திரு. பாரதிராஜா, திரு. வைரமுத்து, திரு. அமிதாப் பச்சன், திரு. ஷாருக்கான் மற்றும் திரை உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.