மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினி எந்த ரோலில் நடிக்க ஆசைப்பட்டாருன்னு தெரியுமா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், முதல் பாகத்தை (PS – 1) வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 6-ஆம் தேதி) மாலை இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பேசுகையில் “இப்படத்தில் வரும் ‘பெரிய பழுவேட்டரையர்’ ரோலில் நான் நடிக்கவான்னு மணிரத்னம் கிட்ட கேட்டேன். ஆனா, அவர் நீங்க பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று கூறினார். இப்படத்தில் ‘பெரிய பழுவேட்டரையர்’ ரோலில் சரத்குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.