ரெஜினாவின் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?
June 3, 2021 / 06:23 PM IST
|Follow Us
கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.
2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ரெஜினா கசாண்ட்ரா தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, ரெஜினா நடிப்பில் ஆறு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘ஈரம்’ புகழ் இயக்குநர் அறிவழகன் இயக்க, இதனை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அறிவழகன் இயக்கியிருக்கும் புதிய படமான அருண் விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.