“என்னை தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்”… உண்மையை போட்டுடைத்த நடிகை ரெஜினா!

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தற்போது, ரெஜினா நடிப்பில் ஆறு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ரா மீடியாவுக்கு கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “10 வருடங்களுக்கு முன்பு எனக்கு அப்போது 20 வயது தான். ஒரு தயாரிப்பாளர் என்னிடம் போனில் பேசும்போது, adjustment பண்ணுவீங்களான்னு கேட்டார். நான் சம்பளத்தில் தான் adjustment பண்ண சொல்லி கேட்கிறார் என்று என் மேனேஜரிடம் பேச சொன்னேன். ஆனால், அந்த தயாரிப்பாளரோ தொடர்ந்து மூன்று முறை adjustment பண்ணனும்னு சொன்ன பிறகு தான், அவர் எதை பற்றி சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் அவரது call-ஐ கட் பண்ணிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share.