கோலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.
2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், MR. சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என படங்கள் குவிந்தது.
ரெஜினா கசாண்ட்ரா தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, ரெஜினா நடிப்பில் ஏழு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடலில் மிதந்தபடி ரெஜினா ஜல யோகா செய்து வரும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.
https://www.facebook.com/172932242818795/posts/2921952941250031/