சுந்தர்.சி படத்தில் பாலிவுட் ஸ்டார்

சுந்தர்.c  நடிப்பில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. சுந்தர்.c தற்பொழுது நடிகர் ஜீவா மற்றும்  ஜெய்யை  வைத்து ஒரு படம் ஒன்றை இயக்கி வருகிறார் . இந்த படமும் வழக்கமான சுந்தர்.c படம் போலவே கலாட்டா நிறைந்த நகைச்சுவை நிறைந்த படமாக இருக்கும் இன்று கூறப்படுகிறது .

இந்நிலையில் சுந்தர்.c  நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் திருஞானம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . இவரின்  இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு திரைப்படம் வெளியாகி  இருந்தது .

மேலும்  இந்த படத்தில் சுந்தர்.c- க்கு வில்லனாக நடிக்க இயக்குனர் அனுராக் காஷ்யப்பை இயக்குனர்  திருஞானம்  அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது . பாலிவுட் பிரபல இயக்குனராக திகழ்கிறார் அனுராக் . இவர் நடிகர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை அசத்தி இருந்தார் . இந்த நிலையில் இவர் மீண்டும் தமிழில் வில்லனாக நடிக்க உள்ளார் .

Share.