மாநாடு படத்திற்கு நடக்க இருக்கும் வெற்றி விழா !

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மாநாடு . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் யுவன் சங்கர் ராஜா. S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை தயாரித்து இருந்தார் . கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் . கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

நீண்ட வருடமாக வெற்றிக்கு காத்துகொண்டு இருந்த சிம்புவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது . உலக அளவில் இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது .

இந்நிலையில் மாநாடு படத்தின் நூறு நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியதை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடைபெற போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த விழாவில் ரஜினி , கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வதற்கு அதிக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் .

Share.