தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டைக் காட்சியை படமாக்கும்போது நடிகை ரித்திகா சிங்கிற்கு கையில் காயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததுடன், காயத்துடன் இருக்கும் ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.