ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடிக்கும் ‘RRR’… செகண்ட் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இந்த படத்தை அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்தார். இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக்கை வருகிற நவம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.