கர்ப்பமாக இருக்கும் ‘RRR’ பட நடிகை அலியா பட்டுக்கு வளைகாப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்!
October 8, 2022 / 02:33 PM IST
|Follow Us
ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி, RRR’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா).
இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.425.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அலியா பட் ஹிந்தியில் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார். தற்போது, கர்ப்பமாக இருக்கும் நடிகை அலியா பட்டுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.