‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகை அலியா பட்… இன்ஸ்டாவில் போட்ட பதிவு!

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இப்போது, அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் ‘பிரம்மாஸ்த்ரா, கங்குபாய் கத்தியாவடி’, தெலுங்கில் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR) என மூன்று மெகா பட்ஜெட் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள ‘RRR’ படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வருகிறார்.

இதில் அலியா பட்டுடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை இந்த ஆண்டு (2021) அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

சமீபத்தில், நடிகை அலியா பட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக அலியா பட் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

Share.