“அஜித்தின் 61-வது படத்தில் நானும் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு”… சமுத்திரக்கனி கொடுத்த சூப்பர் அப்டேட்!
May 13, 2022 / 02:26 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.
இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதில் நடிக்க இயக்குநர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சமுத்திரக்கனி கொடுத்த பேட்டியில் “AK 61 ஒரு அற்புதமான கதைக்களம். எனக்கு அதுல ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சிருக்கு, நல்ல களம் கிடைச்சிருக்கு. அந்த படத்துல நானும் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு” என்று கூறியுள்ளார்.