டைம் டிராவல் படமான ‘டிக்கிலோனா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த புது ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘டிக்கிலோனா’-வின் ஷூட்டிங் முடிந்து விட்டது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். பொதுவாகவே சந்தானம் படத்தில் காமெடி சூப்பராக இருக்கும். இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ரோல்களில் சந்தானம் மாஸ் காட்டப்போகிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் அனகா, ஷிரின், ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த ராஜ், யோகி பாபு, ராம்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ சந்தானம் ரசிகர்களுக்காக இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தின் புதிய ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.