டைம் டிராவல் படமான ‘டிக்கிலோனா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானம் நடித்துள்ள புதிய படமான ‘டிக்கிலோனா’ நேற்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். பொதுவாகவே சந்தானம் படத்தில் காமெடி சூப்பராக இருக்கும். இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ரோல்களில் சந்தானம் மாஸ் காட்டியிருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் அனகா, ஷிரின், ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த ராஜ், யோகி பாபு, ராம்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்போது, இந்த படத்தை ‘ஜீ5’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.