அடேங்கப்பா… 8 நாட்களில் சந்தானத்தின் ‘குலுகுலு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘குலுகுலு’ கடந்த ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை மேயாத மான் , ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அதுல்யா, நமீதா, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் – சேசு, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 8 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.