தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பிஸ்கோத்’ சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.
இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள புதிய படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் நடித்துள்ளாராம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிவடைந்தது. கடந்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று சந்தானம் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.