தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பிஸ்கோத்’ சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.
காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருந்த இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சபாபதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாச ராவ் இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை நடிகர் ஆர்யா ட்விட்டரில் அறிவித்ததுடன், இன்று சந்தானத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இதில் முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
Happy Birthday My Darling @iamsanthanam
You are the best
love u
Wishing the whole team of #Sabhaapathy a huge success#HBDSANTA#RSrinivasaRao @BaskarArumugam9 @SamCSmusic @onlynikil #ARMohan#CRameshKumar @RKENTERTAINMENT pic.twitter.com/aQhIlu9X3B
— Arya (@arya_offl) January 20, 2021