2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவரைப்போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரது மனைவி கீதாஞ்சலி தற்போது தான் மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமாக உள்ளதாகவும், வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்றும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் கீதாஞ்சலி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் செம க்யூட்டாக இருக்கும் கீதஞ்சலி இதோ!
https://www.instagram.com/p/CGjQipHDxR1/?igshid=1vkvgfk90x2oe
https://www.instagram.com/p/CGh_4b5jWqw/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CGh_b2KjWWP/?igshid=6jnt2h2u4x6y