தனுஷ் மனைவியுடன் செல்வராகவன் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம்!
September 15, 2020 / 07:00 PM IST
|Follow Us
2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவரைப்போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரது மனைவி கீதாஞ்சலி தற்போது தான் மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமாக உள்ளதாகவும், வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்றும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மகிழ்ச்சியான 21 வது வாரம் என்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இவருடன் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.