அந்த 4 படங்களில் நான் நடிக்க மறுத்தேனா?… டென்ஷனான ஷாந்தனு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பிரபல இணையதள பக்கம் ஒன்று ஷாந்தனு நடிக்க மறுத்து சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் என்று குறிப்பிட்டு ‘பாய்ஸ், களவாணி, சுப்ரமணியபுரம், காதல்’ ஆகிய படங்களின் பெயரை சொல்லியிருந்தார்கள். தற்போது, இது தொடர்பாக ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். நான் இதில் எந்த ஒரு படத்திலும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Share.