இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருகான், பல வெற்றிப் படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
1991 ஆம் வருடம் கௌரி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாருக்கானுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒருவரான சுஹானா திரையுலகில் இன்னும் அறிமுகம் ஆகவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிக ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
தனது அன்றாட வாழ்வைப் பற்றி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வரும் சுஹானா, தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CC5mtcrn3b7/?igshid=1vjpawi964xxr
தற்போது திரைத்துறை சார்ந்த ஒரு படிப்பை இலண்டனில் பயின்று வரும் இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.