சிம்பு திரைப்படத்தில் இந்த இளம் நடிகர் தான் இசையமைப்பாளர்!
October 8, 2020 / 09:05 PM IST
|Follow Us
2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன்.
நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது இந்த படத்திற்கு ஏற்கனவே டி.இமான் இசையமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் சுசீந்திரன் படத்தில் ஏற்கனவே நடித்திருந்த நடிகர் ஜெய் இந்த வாய்ப்பை தனக்கு தருமாறு கேட்டுக் கொண்டதால், இந்த படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது. நடிகர் ஜெய் இசையமைப்பாளராக எப்படி சாதிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.