இரட்டை குழந்தைகளை பெற்ற பிரபல பாடகி !

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி . முன்னணி நடிகைகளுக்கும் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்து வருகிறார் . பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சின்மயி . இவரின் குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . ரகுமான் இசையில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகி இருந்தார் சின்மயி . முன்னதாக சன் டிவியில் நடந்த சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் வென்று இருந்தார் சின்மயி . ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பாடல் பாடி இருக்கிறக்கிறார் சின்மயி .

எமி ஜாக்சன் , தமன்னா , சமீரா போன்ற நடிகைகளுக்கு இவர் குரல் கொடுத்தாலும் நடிகை சமந்தாவிற்கு தெலுங்கில் தொடர்ந்து இவர் தான் டப்பிங் செய்து வருகிறார் .

கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் சின்மயி .இந்நிலையில் சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி உள்ளது .தற்பொழுது சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share.