டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்துள்ளார்.
சமீபத்தில், இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்துள்ளதாகவும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தை வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Tadantadaaan
Unleashing the #DoctorTrailer
https://t.co/neaIEnVMlO @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @KalaiArasu_ @DoneChannel1 @proyuvraaj @SunTV @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/KVYwQZQMPt
— KJR Studios (@kjr_studios) September 25, 2021