‘உலக நாயகன்’ கமல் ஹாசனுடன் கைகோர்க்கப்போகிறாரா சிவகார்த்திகேயன்?… தீயாய் பரவும் தகவல்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து ‘ரங்கூன்’ என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

Share.