சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனது சமீபத்திய அறிக்கையில் சமுதாய விலகல் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ” இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உதவும் நல்ல உள்ளங்களை நான் மனதார பாராட்டுகிறேன். ஒரு காயத்தின் வடு உடனடியாக சிறியதாகவே தெரியும் ,ஆனால் நாளடைவில் அதன் வீரியம் புரியும். அதைப்போல இந்த கொரோனாவின் பாதிப்பு எதிர்காலத்தில் பூதாகரமாக இருக்குமென்று தெரிகிறது. அதற்கு மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த உயிர் கொல்லி நோய் சாதாரண மக்களை மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நோய்க்கு முடிவே இல்லாதது போல தோன்றுகிறது” என்றிருக்கிறார்.
மேலும் அவர் , இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாதுகாப்பிலும் ,அவர்கள் தேவையில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும் அதுவே அனைவரது தலையாய கடமை என்றும் , எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் சமுதாய விலகலை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் மக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் கூறியது மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.