தமிழ் சினிமாவிற்கு துரோகி என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும் இவர் இரண்டாவதாக இயக்கிய இறுதிச்சுற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து இவர் இயக்கிய சூரரைப்போற்று திரைப்படமும் மெகா ஹிட் ஆனது . இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்தார் , அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .
படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது . பல விருதுகளை இந்த படம் பெற்று வருகிறது .
அந்த வகையில் ஜப்பான் நாட்டில் வருடம் வருடம் ஒசாகா விருது என்னும் விருது 1963-வது ஆண்டு முதல் கொடுத்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த விழாவில் நடிகர் சூரரைப்போற்று படம் 6 விருதுகளை குவித்துள்ளது .அதில் சிறந்த நடிகராக சூர்யாவும் , சிறந்த இயக்குனராக சுதா கொங்கராவும் ,சிறந்த படமாக சூரரைப்போற்று படமும் , சிறந்த தயாரிப்பு நிறுவனமாக 2டி நிறுவனமும் சிறந்த கலை இயக்குனராக ஜாக்கியும் , சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் சிறந்த கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கா.பே.ரணசிங்கம் என்ற படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.