எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட்டுள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்!
July 29, 2020 / 10:44 PM IST
|Follow Us
பாகுபலி பட இயக்குனரான எஸ்எஸ் ராஜமௌலி தற்போது தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களாக தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் காய்ச்சல் இருந்து வந்ததாகவும் அதையடுத்து தற்போது டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இன்று வந்த டெஸ்ட் ரிசல்டில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ளதாவது “சில நாட்களுக்கு முன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் குறைந்த அளவு காய்ச்சல் வந்தது. அது தானாகவே அடங்கி விட்டது. இருந்தாலும் நாங்கள் அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். தற்போது வந்த அந்த டெஸ்ட் ரிசல்டில் எங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் நாங்கள் வீட்டிலேயே குவாரண்டின் செய்து கொண்டு மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள் எடுத்து வருகிறோம்” என்றிருக்கிறார்.
நாங்கள் அனைவரும் எந்தவிதமான கொரோனா சிம்டம்ஸ் இல்லாமல் நலமாக இருக்கிறோம். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்து வருகிறோம் என்றும், எங்கள் உடம்பில் ஆன்டிபாடீஸ் உருவானதும் பிளாஸ்மா தானம் செய்யவுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ராஜமௌலி அடுத்து ரௌத்திரம் ரணம் ருத்ரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள். 2021 ஜனவரி மாதம் இந்த படம் வெளியிடப்பட போவதாக திரைப்பட குழு தெரிவித்துள்ளது.