நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வினோத் நடிகர் அஜித் இன்னும் படம் பார்க்கவில்லை என்றும் டப்பிங் பொது அவர் படத்தை பார்த்தார் படம் முழுவதும் முடிவடைந்த பிறகு அஜித் படத்தை பார்க்கவில்லை என்றும் விரைவில் படத்தை பார்ப்பார் என்றும் கூறினார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.