• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 300 கோடி ரூபாய்‌ மோசடி புகார்… விளக்கமளித்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா!

300 கோடி ரூபாய்‌ மோசடி புகார்… விளக்கமளித்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா!

  • July 24, 2020 / 08:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
300 கோடி ரூபாய்‌ மோசடி புகார்… விளக்கமளித்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா!

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் தனது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் ‘சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். தற்போது, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் “கொரோனா வைரஸ்‌ தாக்கத்தால்‌ பொது மக்களும்‌, திரைத்துறையினரும்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்‌ இன்றைய நிலையில், சில தொலைக்காட்சி சேனல்கள்‌, பத்திரிகைகள்‌, மற்றும்‌ சமூக வலைத்தளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில்‌ எள்‌ முனையளவும்‌ உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்‌.

தமிழ்த்‌ திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும்‌, பல திறமையான நடிகர்களையும்‌, படைப்பாளிகளையும்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களையும்‌ தந்துள்ள எனது ‘ஸ்டுடியோ கிரீன்‌’ நிறுவனம்‌ மூலம்‌ தயாரிக்கப்பட்ட ‘மகாமுனி’ திரைப்படம்‌ 2019-ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 6-ம்‌ தேதி ரிலீஸ்‌ ஆனது. திரு.நீதிமணி என்பவர்‌ 2019-மே மாதம்‌ என்னை அணுகி ‘மகாமுனி’ திரைப்படத்தின்‌ தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும்‌ என்று கோரினார்‌. அவ்வகையில்‌ 2019-மே 27-ம்‌ தேதி ரூ.6,25,00,000 (ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம்‌ ரூபாய்) தொகைக்கு நீதிமணி அவர்களின்‌ ‘Tarun Pictures’ நிறுவனத்திற்கு மகாமுனி திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம்‌ போடப்பட்டது. நீதிமணி‌ அவர்கள் பகுதி தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது லட்சம்)‌ மட்டுமே செலுத்தினார்‌. மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம்‌) தொகையை பிறகு தருவதாகக் கூறினார். இன்றுவரை தராமல்‌ என்னை ஏமாற்றிவிட்டார்‌. மீதமுள்ள தொகையை தரவேண்டி நீதிமணி அவர்கள் மீது சினிமா துறையின் சட்ட திட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌ திரு.நீதிமணியும்‌ அவரின்‌ கூட்டாளிகளும்‌ ரூ.3,00,00,000 (மூன்று கோடி) மோசடி செய்துவிட்டதாக திரு.துளசி மணிகண்டன்‌ என்பவர்‌ ஒரு புகார்‌ அளித்துள்ளார்‌. என்‌ மீதோ, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனம்‌ மீதோ, எவ்விதப் புகாரும்‌ அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம்‌ செய்யும்‌போது அதை வாங்கும்‌ நபர்‌ என்ன செய்கிறார்‌, அவரின்‌ பின்னணி என்ன என்பதை நாம்‌ ஆராய்ச்சி செய்வதில்லை. சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேசமுடியும்‌. அவ்வகையில்‌ ‘மகாமுனி’ திரைப்படத்தை சட்டப்படியாக முறையாக விற்பனை செய்ததைத் தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

திரு.நீதிமணி அவர்கள்‌ மீது திரு.துளசி மணிகண்டன்‌ அவர்கள் அளித்துள்ள புகாரில்‌ எவ்வித முகாந்திரமும்‌ இல்லாமல்‌ என்னையும்‌, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனத்தையும்‌ இணைத்து, என்‌ புகைப்படத்தையும்‌ பயன்படுத்தி நான்‌ நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ‘300-கோடி ரூபாய்‌ மோசடி’ என உண்மைக்கு புறம்பான, மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. என்னிடம்‌ எவ்வித விளக்கமும்‌ கேட்காமல், தன்னிச்சையாகவும்‌, தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும்‌ வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தச்‌ செய்திகளைப்‌ பார்த்து நானும்‌, என்‌ குடும்பத்தினரும்‌ மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம். இதுபோன்ற செய்திகள் திரைத்துறையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும், உண்மைக்குப் புறம்பாகவும் யாரும் வெளியிட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்த செய்தியை வெளியிடுவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்வதோடு, மான நஷ்டஈடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி” என்று தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

#PressRelease@StudioGreen2 @kegvraja pic.twitter.com/hDF0ZFbtoR

— Studio Green (@StudioGreen2) July 24, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gnanavelraja
  • #producer
  • #studio green

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

இளம் இயக்குநருக்கு 2 டாப் ஹீரோக்கள் கொடுத்த கிரீன் சிக்னல்… ஆனா, ட்விஸ்ட் வைத்த தயாரிப்பாளர்!

இளம் இயக்குநருக்கு 2 டாப் ஹீரோக்கள் கொடுத்த கிரீன் சிக்னல்… ஆனா, ட்விஸ்ட் வைத்த தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் – நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ‘டாக்டர்’… ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட்!

சிவகார்த்திகேயன் – நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ‘டாக்டர்’… ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

5 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

5 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

5 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

5 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

5 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version