நடுராத்திரியில் கைதுசெய்யப்பட்ட சூர்யா தேவி – வனிதா அதிரடி!
July 23, 2020 / 03:35 PM IST
|Follow Us
இணையதளம் முழுவதும் சர்ச்சையாக பேசப்பட்டு வந்த விஷயம் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் பற்றியதாகும். இவர்கள் திருமணமான முதல் நாளிலிருந்தே பல விமர்சனங்களை சந்தித்து வந்தார்கள்.
பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதல் பலர் வனிதா விஜயகுமாரை விமர்சித்தும், அவருக்கு அட்வைஸ் செய்தும் பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதில் சூர்யா தேவி என்பவர் தகாத வார்த்தைகளால் வனிதா விஜயகுமாரை விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து வனிதா, சூர்யா தேவி மீது சைபர் புல்லியிங் கேஸ் கொடுத்தார். போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வனிதாவின் இந்த கேஸ் வடபழனி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது வடபழனி போலீசார் சூர்யா தேவியை குண்டர் சட்டத்தில் நடுராத்திரியில் கைது செய்துள்ளார்கள். சூர்யா தேவியின் தோழி இதுபற்றி, சூர்யா தேவி நடுராத்திரி 1 மணிக்கு தனக்கு போன் செய்து குழந்தைகள் தனியாக இருக்கிறார்கள் அவர்களுடன் வந்து இருக்குமாறு கூறியதாகவும், அவர்கள் உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்குமாறு கூறிவிட்டு தன்னை கைது செய்துவிட்டார்கள் என்று தெரிவித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இதை ஒரு வீடியோ பதிவாக அவரது தோழி எடுத்து வெளியிட்டதை தற்போது நீக்கியுள்ளார்கள். சூர்யாதேவியை கைது செய்து அழைத்து சென்ற பின் அந்த காவல் நிலையத்திற்கு வனிதா நேரடியாக வந்து அவரை சந்தித்ததாகவும் செய்தி வந்துள்ளது.
சூர்யா தேவி வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணமான நாள் முதலே அவர்களை தகாத வார்த்தைகளால் விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் இந்த கேஸை வனிதா விஜயகுமார் கொடுத்ததாகவும், அதனால் தற்போது சூர்யா தேவி கைது செய்யப்பட்டதும் வெளிவந்துள்ளது.